நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5,10,68,227 ஆகும்.
உச்சநீதிமன்றத்தில் 80,221, உயர்நீதிமன்றங்களில் 62,00,061, மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 4,47,87,945 வழக்குகளும் உள்ளன. இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 1,10,558 வழக்குகள் நிலுவையில் உள்ளன.