சேலம் மாவட்டத்தில் உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவரும் இச்சங்கம், சீர்வரிசை பொருட்கள், மளிகை பொருட்கள் உட்பட சுமார் 50000 ரூபாய் மதிப்பில், சுமார் 5-மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதில் தர்மபுரி, சென்னை, ராமநாதபுரம், திருவாரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தனர்.
சேலம் மாவட்டம் வருவாய்த்துறை அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற இத்திருமணத்தில், ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதேபோல பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தப்படும் என்று கூறினார்.