தருமபுரி அருகே உள்ள மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதி அரவிந்தன் (28), அபிபிரியா (22). இவர்கள் இருவரும் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி நோக்கி நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அபிபிரியா ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.