சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் : அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட அவரது இரண்டு நண்பர்கள் மற்றும் உடந்தையாக இருந்த 2 பெண்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரமக்குடி புதுநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்த சிறுமியை அதே புதுநகர் பகுதியில் வசித்து வரும் பரமக்குடி நகர்மன்ற 3 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிகாமணி என்பவர் சிறுமை அச்சுருத்தி மிரட்டி பாலியல் துன்புருத்தலில் ஈடுபட்டுள்ளார்.

அவரது நண்பர்களான பிரபாகரன் ( மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர்.) மற்றும் ஜவுளிக்கடை அதிபர் ராஜாமுகமது, ஆகியோரும் பல மாதங்களாக அந்த சிறுமியை மிரட்டி பல இடங்களுக்கு அழைத்துசென்று பாலியல் துன்புருத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து எஸ்.பி.யின் உத்தரவையடுத்து பரமக்குடி மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர், சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, கயல்விழி மற்றும் உமா ஆகிய 5 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதி மன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News