சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம்

கடந்த 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்‌ஷ்மி நாராயணன், லக்‌ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், ஜான் சத்யன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஆறு வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதில் விக்டோரியா கவுரி, பாலாஜி,ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி ஏற்பு உறுதி மொழி செய்துவைத்தார்.

RELATED ARTICLES

Recent News