Connect with us

Raj News Tamil

பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை?

இந்தியா

பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை?

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். இதை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் தான் இறந்துவிட்டதாக வெளியிட்ட தகவல் பொய்யானது என்றும், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் கூறி பூனம் பாண்டே நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கடுப்பான பலரும் பூனம் பாண்டேவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகை பூனம் பாண்டேதான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பிய நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

போலியான செய்தியை பரப்பிய பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் போலீசாருக்கு கோரிக்கை வந்துள்ளது. இல்லையெனில் பலரும் இதனை தவறான முன்னுதாரணமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top