50% ஆதார் விவரம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகூ!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக 50 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகூ தெரிவித்துள்ளார்.

சென்னை செய்தியாளர்களிம் பேசிய அவர், தமிழகத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் மூலமாக வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன என்றும் இதுவரை 3 கோடியே 12 லட்சம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

கள்ளக்குறிச்சி, அரியலூர், தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் 11 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் சத்ய பிரதா சாகூ விளக்கம் அளித்தார்.