பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை…இதுவரை 50 பேர் பலி, 62 வீடுகள் சேதம்..!!

பாகிஸ்தானில் கடந்த மாதம் இறுதியில் ஆரம்பித்த கனமழை நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த கனமழையால், பஞ்சாப், சிந்து மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 62 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, மழை சற்று ஓய்ந்திருந்தாலும், வார இறுதியில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News