சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக நிர்வாகி உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சிவகங்கை கொட்டகுடியில் அருகே அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 2 நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தார். அவரை வரவேற்று ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் வேட்பாளர் சென்றதும், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா ரூ.50 வீதம் விநியோகிக்கப்பட்டது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அதிமுக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உட்பட 2 பேர் மீது சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.