தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையின் மாணியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த விவாத்தின்போது, தமிழகம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று, 500 மதுபானக் கடைகளை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், நாளை முதல், 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பாராட்டி வருகின்றனர்.