போக்குவரத்து துறையில் 10 ஆண்டுகளாக 50,000 கோடி ரூபாய் நஷ்டம்

போக்குவரத்து துறையில் கடந்த 10 ஆண்டுகளாக 50,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

அன்புமணி அளித்துள்ள பேட்டி:

செங்கப்பட்டில் நடந்த வன்னியர் சங்க தலைவர் காளிதாஸ் கொலை வழக்கில், இன்னும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையேல், பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க, தி.மு.க., அரசு தான் காரணம். இந்த துறை திடீரென நஷ்டத்தில் இயங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே, 50,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஓய்வுபெறும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களைக் வழங்க முடியாத நிலை உள்ளது. முதல்வர் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில், சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் கவர்னர் எடுத்த முடிவு தவறு; தார்மீக அடிப்படையில் பார்த்தால் அது சரி. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News