பிரதமா் மோடி காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மறுகட்டமைப்பு செய்வதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில், இந்தியா மீதான உலகின் கண்ணோட்டம் பெருமளவில் மாறியுள்ளது. அதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தோ்ந்தெடுத்தது முதல் காரணம். அந்த அரசு முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்து, சவால்களுக்குத் தீா்வு கண்டு வருவது மற்றொரு காரணம்.
அடுத்த 25 ஆண்டுகளில் வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்கள் மறுகட்டமைப்புத் திட்டமானது இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய அத்தியாயமாக இருக்கும் என்றார்.