54 சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களின் 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களுக்குப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன.

இந்த மின்சார ரயில்களின் காலஅட்டவணை ஆண்டுதோறும் மாற்றிஅமைக்கப்படும். அதன்படி, இந்தஆண்டுக்கான மாற்றப்பட்ட காலஅட்டவணை நேற்றுமுதல் அமலுக்குவந்துள்ளது.

ஆண்டுதோறும் கால அட்டவணையை மாற்றும் போது, பயணிகளின் வசதிக்காக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில்களும், தாம்பரம் மற்றும் வேளச்சேரி வழித்தடத்தில் தலா 19 ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே அதிகாரி கூறியதாவது “பராமரிப்பு பணிக்காக ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட்ட நெரிசல் இல்லாத மற்றும் இரவு நேரத்தில் மட்டும்தான் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் அங்குரயில் சேவை குறைக்கப்படவில்லை” என்றனர்.

RELATED ARTICLES

Recent News