சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து…காரணம் என்ன?

சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5:15 மணிக்கு திருவனந்தபுரம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3:40 மணிக்கு, சென்னையில் இருந்து சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஜெட் விமானம், மாலை 4:05 மணிக்கு சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து காலை 8:35 மணிக்கு, சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3:05 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து, சென்னை வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6:45 மணிக்கு சீரடியில் இருந்து, சென்னை வரவேண்டிய ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 6 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை முடிந்து விட்டதால், பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.எனவே இந்த விமானங்களில் பயணிக்க மிகவும் குறைந்த பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் போதிய பயணிகள் இல்லாமல், இந்த 6,விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, முன்னதாகவே தகவல் தெரிவித்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 6,விமானங்களில், 4 விமானங்கள் உள்நாட்டு விமானங்கள். மேலும் இரண்டு விமானங்கள் சர்வதேச விமானங்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News