Connect with us

Raj News Tamil

ஆண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த 61 வயது விமான பயணி! செம ரகளை!

உலகம்

ஆண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த 61 வயது விமான பயணி! செம ரகளை!

விமானத்தில் செல்லும் பெண் பயணிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும், பாலியல் வன்கொடுமைகள் கொடுக்கும் சம்பவம், தற்போது அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு தரப்பிலும், சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகத்தில் உள்ள வேறு சில நாடுகளிலும், இத்தகைய கொடுமைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இருந்து, அலஸ்கா பகுதிக்கு, விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணித்த டேவிட் ஆலன் (61) என்ற பயணி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, விமானத்தில் ஏறியதும், முதலில் மது அருந்திய அவர், கலாட்டாவில் ஈடுபட்டார்.

அங்கிருந்த ஆண் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்தார். விமானிக்கு எடுத்துச் சென்ற உணவுகளை கீழே தட்டிவிட்டு, ரகளையில் ஈடுபட்டார்.

இவ்வாறு தொடர் பிரச்சனைகளை செய்து வந்த அவரை, விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “நான் எந்த தவறையும் செய்யவில்லை.. ஆனால், நான் மது அருந்தியது உண்மை தான்..” என்று தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top