ஆடுகளை மேய்த்த மூதாட்டி.. திடீரென வந்த ரயில்.. இறுதியில் நடந்த கொடூரம்..

வேலூர் அருகே, ரயில் தண்டவாளத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி, ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனமேரி. 62 வயதாகும் இவர், செண்பகம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில், தனக்கு சொந்தமான ஆடுகளை இன்று மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அரக்கோணத்தில் இருந்து வந்த பயணிகள் ரயில் மோதி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தனமேரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News