தென்னாப்ரிக்காவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் பலியாகினர்.
தென்னாப்ரிக்காவின் உள்ள ஜோஹன்னஸ்பர்க்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயர சம்பவத்தால் 63 பேர் பலியாகினர். 43 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து கட்டடத்துக்குள் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டடம் ஒரு ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருந்ததால், தீ விபத்து நேரிட்டபோது பலரும் கட்டடத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். வெளியேற முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.