உத்தர பிரதேசத்தின் லக்னோ சிறையில் உள்ள கைதிகளிடம், கடந்த ஆண்டு டிசம்பரில் சுகாதார பரிசோதனைகள் நடைபெற்றது.
இந்த பரிசோதனையில் சிறையில் உள்ள 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது சக கைதிகள் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பாதிப்பு ஏற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் சீராக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறை நிர்வாகம், தொடர்ந்து செயல்பட்டு, தொற்று ஏற்பட்ட கைதிகளின் உடல் நலனை கண்காணித்து வருகிறது.
இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டபோதிலும், கடந்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி. பாதிப்பால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று நிர்வாகம் உறுதி செய்துள்ளது.