டெல்லியில் ஜிம்மில் 68 வயது பாட்டி உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், அந்த மூதாட்டி தனது மகன் அஜய் சங்க்வானுடன் சேர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்துக்கிறார். மகனின் அறிவுறுத்தல் படி, எடையை தூக்குவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பிற பயிற்சிகளை உற்சாகத்துடன் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த மூதாட்டியையும், அவரது மகனையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளத்தில் மூதாட்டி மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளார்.