Connect with us

Raj News Tamil

69-வது தேசிய திரைப்பட விருதுகள்…யாருக்கு அந்த விருது??

சினிமா

69-வது தேசிய திரைப்பட விருதுகள்…யாருக்கு அந்த விருது??

2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இந்த விருதை அறிவிக்கிறார்.

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ஜெய் பீம், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், சிம்பு நடித்த மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய் பீம், கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் இந்த திரைவிருதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை ‘புஷ்பா’ படம் போட்டியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top