கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் தெருவில் வசித்து வரும் பொது மக்கள் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது, எலி காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
குடிநீர் மூலம் ஏற்பட்ட தொற்று காரணமாக இவர்களுக்கு எலி காய்ச்சல் பரவியது தெரிய வந்துள்ளது. இதனால் அக்கிராமத்தை சேர்ந்த மேலும் பலருக்கு நோய் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.