ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில் உள்ளார்.
ஜனாதிபதி Al Nahyan என்பவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள். மேலும் ஜனாதிபதிக்கு 9 பிள்ளைகளும் 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். உலகில் பிரபலமான பல நிறுவனங்களில் Al Nahyan குடும்பம் முதலீடு செய்துள்ளது. எலான் மஸ்கின் Space X நிறுவனத்திலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
Al Nahyan குடும்பம் அபுதாபி மாகாணத்தில் அமைந்துள்ள Qasr Al-Watan அரண்மனையில் வசித்து வருகிறது. 94 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அரண்மனை போன்று மேலும் சில அரண்மனைகள் இந்த குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது.
அபுதாபி ஆட்சியாளரின் இளைய சகோதரர் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் 700 க்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார். தற்போதைய சந்தை மதிப்பு என்பது 235 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, துபாய் ராயல்ஸ் பாரிஸ் மற்றும் லண்டன் உட்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.