குளத்தில் மூழ்கிய 75 வயது முதியவர் : 18 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ் மியாபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டி என்ற கிருஷ்ணன் (வயது75).
இவர் நேற்று மாலை அருகிலுள்ள நவர குளத்தில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அங்கு சென்று தேடிப் பார்த்தனர்.

அங்கு அவரை காணாததை அறிந்து உறவினர்கள், இளைஞர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் நேற்று முதல் மாலையில் இருந்து தேடி வந்தனர்.

today tamil news

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் குளத்தின் அக்கரையில் மயங்கிய நிலையில் கிருஷ்ணன் நீரில் மூழ்கியிருந்தார். இதனை அடுத்து வள்ளியூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரியவர் கிருஷ்ணனை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.