ஆண் பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது பொதுவாக நடத்தப்படுகிறது. சில நேரங்களில், ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்வதும், தற்போது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 77 வயதான மூதாட்டி ஒருவர், வித்தியாசமான முறையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த வயதில் அப்படி என்ன தான் வித்தியாச திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என்பதை, தற்போது பார்க்கலாம்..
அமெரிக்கா நாட்டில் ஓஹியோ அருகே உள்ள கோஷன் பகுதியை சேர்ந்தவர் டோரதி டாட்டி. 77 வயதான இவருக்கு, கடந்த 1965-ஆம் ஆண்டு அன்று, திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான 9 வருடங்களிலேயே, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.
பின்னர், தனது முதல் கணவர் மூலம் பிறந்த 3 குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, தன்னுடைய கடமைகளை முடித்தார். இவ்வாறு மற்றவர்களுக்காகவே வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், இனிமேல் தனக்காக வாழ முடிவு எடுத்துள்ளார். இதன் ஒரு படியாக, தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அந்த மூதாட்டி, “என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.. இனிமேல் எனக்காகவே வாழ உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 77 வயதில் மூதாட்டி ஒருவர் இவ்வாறு அதிரடி முடிவை எடுத்துள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.