தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் செல்வராகவன். இவர் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ஆம் பாகத்தை இயக்கி வந்தார்.
ஆனால், இப்படத்தின் ஷீட்டிங் தற்போது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தை 15 கோடி ரூபாயில் எடுத்து தருவேன் என்று செல்வராகவன், தயாரிப்பாளரிடம் கூறியிருந்தாராம்.
ஆனால், அதையும் மீறி, அதிக தொகை செலவு செய்யப்பட்டிருப்பதால், தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால், படத்தின் ஷீட்டிங்கை அவர் நிறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன், இப்ப இப்படி ஆயிட்டாரே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.