Connect with us

Raj News Tamil

பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த 8 செமீ நீளமுள்ள புழு!

உலகம்

பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த 8 செமீ நீளமுள்ள புழு!

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செமீ நீளமுள்ள புழு உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் 64 வயதுடைய பெண்மணி ஒருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் ஒவ்வொரு பிரச்சினையாக ஆராய்ந்துகொண்டே வர, 2022இல் கூடுதலாக அவருக்கு மறதியும் மன அழுத்தமும் ஏற்படவே, அவரது மூளையை ஒரு MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள் அவர்கள்.

அந்தப் பெண்மணியின் மூளையின் முன் பகுதியில் ஏதோ காயம் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்க, அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது, சிவப்பு நிறத்தில் ஏதோ நூல் போல இருப்பதை மருத்துவர்கள் கவனிக்க, அது சட்டென அசைந்துள்ளது. அப்போதுதான் அது ஒரு 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழு என்பதை மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

மருத்துவ வரலாற்றில் இப்படி அந்த புழு மனித மூளையில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பிரச்சினை என்னவென்றால், இதுபோன்ற விடயங்கள் எதிர்காலத்திலும் நிகழலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

More in உலகம்

To Top