தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு தினம் தோறும் ஆன்லைனில் ஆன்மீக சத்சங்கம் செய்து வருபவர் சுவாமி நித்யானந்தா.. மேலும் பல்வெறு பாலியல் வழக்கு மற்றும் ஆள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களுக்குள்ளான இவர்,கைது நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலும் அங்கு தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா எனும் பெயர் சூட்டி,தனி பாஸ்போர்ட் மற்றும் கரன்சி என உருவாக்கி, தனக்கென ஒரு உல்லாச வாழ்க்கையே அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மூச்சு விடுவதற்கே சிரமமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.மேலும் என்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என்றும், தனக்காக அருணகிரி நாதருக்கு தீபம் ஏற்றி வழிபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு இருக்கையில் சுவாமி நித்தியானந்தா 8 உலக சாதனைகள் படைத்துள்ளதாகவும், அவை ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளதாகவும் கைலாசாவின் பேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் வாசித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, 1123 அதிகமான தனி ஒருவரின் புத்தகங்கள், அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், அதிகபட்ச பிரம்மோற்சவங்கள், 289,928 மணி நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது உள்ளிட்ட சாதனைகளை படைத்துள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.