ராஜபாளையம் அருகே, மர்மமான முறையில் மூதாட்டி உயிரிழந்தது குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவரத்தினம், வாரந்தோறும் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். ஆனால், நேற்று தேவாலயத்திற்கு வராததால், அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, வீட்டில் அவர் சடலமாக கிடந்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகைகளும் மாயமாகியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.