இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கஞ்சா வைத்திருப்பது குற்றம் என கைது செய்கிறது. ஆனால் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைக்கும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பல பேர் வேலைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜெர்மனியில் ஒரு சில நிபந்தனைகளுடன் பொதுமக்கள் கஞ்சா பயன்படுத்தலாம் என்றும் அனுமதி பெற்ற மருந்து கடைகள் மற்றும் கடைகளில் மக்கள் கஞ்சாவை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ஒரு நபர் 30 கிராம் வரை கஞ்சாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கஞ்சா பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் கஞ்சாவை ருசி பார்த்து மதிப்பீடு செய்வதற்காக கஞ்சா மருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று க ஒருவரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் அறிவித்தது. இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.