Connect with us

Raj News Tamil

நாளை 9 மின்சார ரயில்கள் ரத்து!

தமிழகம்

நாளை 9 மின்சார ரயில்கள் ரத்து!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக செப்.13-ல் 9 மின்சார ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் – திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் – சென்னை மூர் மார்க்கெட், திருத்தணி – சென்னை மூர் மார்க்கெட் உள்ளிட்ட மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top