பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிஹார் மாநிலத்தின் ஜெஹனாபாத், மாதேபுரா, கிழக்கு சம்பரான், ரோக்தாஸ், சரண் மற்றும் சுபால் ஆகிய 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெஹனாபாத்தில் 3, மாதேபுராவில் 2, கிழக்கு சம்பரான், ரோக்தாஸ், சரண் மற்றும் சபால் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.