வயநாடு நிலச்சரிவு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழப்பு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்தில் தற்போது வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News