சத்தீஷ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ வாக இருப்பவர் பிரிஹஸ்பத் சிங். இவர் சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அந்த வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அவர் அறையும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து எம்.எல்.ஏ.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வங்கி ஊழியர்கள் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. சிங் பேசும்போது, விவசாயிகளின் கணக்கில் இருந்து மோசடி செய்து வங்கி ஊழியர்கள் பணம் எடுத்து உள்ளனர். அவற்றை கொண்டு கோடிக்கணக்கான மதிப்பில் தங்களுக்கென்று வீடு கட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேச முயன்றேன். அவர்கள் என்னிடமும் தவறான அணுகுமுறையை கையாண்டனர். அதனாலேயே, நான் ஆத்திரம் அடைந்து, அடித்தேன் என ஆவேசமுடன் கூறினார்.
Raipur, Chhattisgarh| Viral video of Ramanujganj MLA Brihaspati Singh shows him slapping a person near the Central Bank branch in Balrampur district over a dispute over the withdrawal of money pic.twitter.com/GeyM9I07iC
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 5, 2023