யோகிபாபு நடிப்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் மண்டேலா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்த மாவீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிங்கில் பாடலும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் 7 நாட்கள் மட்டுமே மற்ற நடிகர்களின் காட்சி படமாக்கப்பட உள்ளது என்றும், தெரிவித்துள்ளார்.
டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று கூறிய அவர், இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும், தனக்கும், தன்னுடைய குழுவிற்கும் மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இவ்வாறு கூறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதிதி சங்கர், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஜூன் மாதத்தில், கோடை விடுமுறையையொட்டி வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.