Connect with us

விஜய், அஜித் பட நாயகி திரைப்படத்திற்கு தடை..!

சினிமா

விஜய், அஜித் பட நாயகி திரைப்படத்திற்கு தடை..!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அண்மையில் கருங்காப்பியம் என்ற புதிய படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகைகள் ரேஜினா, ரைசா வில்சன், ஜனனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர்.

வரும் 7-ஆம் தேதியன்று வெளியாகுமென்று அறிவிக்கப்பட்ட இப்படத்திற்கு, நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சஞ்ஜித் ஷிவா ஸ்டுடியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கருங்காப்பியம் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top