ஸ்காட்லாந்தில் 28 வயதான ஷானன் போவ் என்ற பெண் துருக்கியில் உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இவருக்கு இரைப்பை பேண்ட் சிகிச்சை (Gastric band surgery) மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிகிச்சையில் உணவு உண்ணும் அளவைக் குறைக்க, வயிற்றின் மேல் பகுதியைச் சுற்றி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேண்ட் பொருத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தச் சிகிச்சையின் போது இப்பெண் இறந்துள்ளார். எந்தச் சிக்கலால் மரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார்.