சென்னை பெரியமேடு பகுதியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாநகராட்சி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
10 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு நீச்சல் குளத்தில் இறங்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. .5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

11 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.