அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வர உள்ளார். இந்நிலையில் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.