புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை என்றும் சட்ட மேதை அம்பேத்கரும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது என்று பி.ஜே.பி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் கோடி சுவாமிகளின் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர் உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, அர்ப்பணிக்கும் நிகழ்வு திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் பி.ஜே.பி மாநில மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் முக்கியமானது என்றும் தாய்மொழி வழியிலேயே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சம் என்றும் விளக்கம் அளித்தார்.