இத்தனை கோடியா??…புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவருடைய நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 பட போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தில் 45 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அவர் புஷ்பா 2 படத்தில் நடிக்க 85 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2-வும் ஹிட் அடித்தால் அவரின் சம்பளம் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News