சென்னைக்கு மிக அருகில் 59 கி.மீ தூரத்தில் 2-வது விமான நிலையம் …!

சென்னை அருகே 2-வது விமான நிலையம் அமையவுள்ளதாக மத்திய அமைச்சர் அறித்துவித்துள்ளர்.

சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் அமையவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ராஜ்யசபாவில் தெரிவித்தார். சென்னையிலிருந்து நாள் ஒன்றுக்கு 100-க்கு மேற்பட்ட பன்னாட்டு விமானங்களும், 400-க்கு மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் 2-வது விமான நிலையம் அமைக்க வேண்டுமென ராஜ்யசபாவில் கோரிக்கை எழுந்ததையடுத்து மத்திய அமைச்சர் வி.கே.சிங் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதாக ஆகஸ்டு-1 தேதி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

Reference Image of Airport Runway

இதையடுத்து ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் ரூ1,500 கோடி மதிப்பீட்டில் 5,000 ஏக்கர் பரப்பளவில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 59 கி.மீ. தொலைவில் பரந்தூர் அமைந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை ,தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய நிலங்கள்,தொழிற்சாலைகள், மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களை பாதிக்காத வகையிலும், அனைத்து வசதிகளும் கொண்டதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.