தமிழக பாஜக தொழில்துறை பிரிவின் துணை தலைவர் செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில்
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு தரப்பினரிடையே மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
குறிப்பாக செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் போட்ட ட்வீட் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ‘தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வக்குமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை தமிழக பாஜக தொண்டர்கள்’ என அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.