“சென்னைக்கு வந்துடுங்க.. இங்க வாழலாம்” – ஒத்துக்கொள்ளாத கணவன்! தற்கொலை செய்த மனைவி!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமாரும், சின்ட்ரல்லா என்ற பெண்ணும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, கணவரை சேலத்தில் விட்டுவிட்டு சென்னைக்கு வந்த சின்ட்ரெல்லா, அங்குள்ள ஐடி கம்பெணி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

முதலில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வந்த அவர், பிறகு பணிபுரியும் அலுவலகத்திற்கு அருகிலேயே தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை அன்று, சிண்ட்ரெல்லா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், சேலத்தில் உள்ள தனது கணவரை, சென்னையில் தனிக்குடித்தனம் நடத்த சின்ட்ரெல்லா அழைத்துள்ளார்.

ஆனால், தன்னுடைய பெற்றோரை பிரிந்து சென்னைக்கு வரமுடியாது என்று கணவர் கூறியதால், விரக்தி அடைந்த சிண்ட்ரெல்லா, தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தனிக்குடித்தனம் நடத்துவதற்கு கணவன் ஒத்துக்கொள்ளாததால், மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News