பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து ரபேல் வாட்ச் குறித்தும் தனது வீட்டு வாடகையை நண்பர்கள்தான் தருகிறார்கள் என்றும் பேசியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சுதான் தற்போது இணயத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.