சினிமா
மார்கெட் இழந்த அமலா பால்! சரசரவென குறைந்த சம்பளம்?
சிந்து சமவெளி நாகரீகம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். இதையடுத்து, மைனா, வேலையில்லா பட்டதாரி, தலைவா என்று பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
இதுமட்டுமின்றி, ஆடை, கடாவர் உள்ளிட்ட படங்களின் மூலம் கதையின் நாயகியாகவும் அவர் நடித்து வந்தார். ஆனால், தற்போது தமிழில் மார்கெட்டை இழந்து அமலா பால், படவாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.
இதற்கிடையே, இவரது நடிப்பில் உருவான போலா என்ற இந்தி திரைப்படம், தற்போது வெளியாகியுள்ளது. கைதி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நடிப்பதற்கு, ரூபாய் 25 லட்சத்தை மட்டுமே அவர் சம்பளமாக பெற்றுள்ளார்.
பொதுவாக பாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிகப்படியான தொகை சம்பளமாக வழங்குவது வழக்கம். ஆனால், பாலிவுட்டிலேயே இவ்வளவு குறைவான தொகையை அவர் சம்பளமாக பெற்றிருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
You must be logged in to post a comment Login