80 மற்றும் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. தற்போது, சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் இவர், அவ்வப்போது திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தோனியை தல என்று குறிப்பிட்டு, அவர் கேப்ஷன் வழங்கியிருந்தார்.
இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள், தோனி வெறும் கிரிக்கெட் வீரர் மட்டும் தான்.. அஜித் மட்டும் தான் என்றுமே தல என்று கூறி வருகின்றனர்.