இரவு உணவு சாப்பிட்ட மாணவிகள் 50 பேருக்கு வாந்தி மயக்கம்!

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 50பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. நேற்றிரவு அந்த மாணவிகளுக்கு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.

இதனை சாப்பிட்ட மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அனைவரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த உணவை சோதித்ததில் சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

RELATED ARTICLES

Recent News