கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். குறிப்பாக, திமுகவுக்கு 1,408.94 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து திமுக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுகவின் சொத்து மதிப்பு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்திருப்பதால் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் திமுகவுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ.500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் காயத்திரி ரகுராம், ” திமுக, அண்ணாமலையை விட்டறாதீங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள். அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார்” என தெரிவித்துள்ளார்.
திமுக, அண்ணாமலையை விட்டாதிங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள்.. அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார்.… pic.twitter.com/Rt6H0Xzmiv
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) April 16, 2023