மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என டெல்லி சட்டசபைக்கு வெளியே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.