விவாகரத்து பெறும் பெண்களுக்கு, ஜீவனாம்சம் என்ற விஷயம் வழங்கப்படுவது வழக்கம். கணவரை பிரிந்த பிறகு, அந்த குறிப்பிட்ட தொகையை வைத்து, வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதற்காக, அதனை இழப்பீடாக வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில், கணவனின் சொத்து மதிப்பில் பாதி தொகையை தனது மனைவிக்கு வழங்க வேண்டும் என்பது விதி.
இந்த விதியின் காரணமாக, அமெரிக்க தொழில் அதிபர் பில் கேட்ஸ், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், ஜானி டெப் போன்ற பல்வேறு பிரபலங்கள், தங்களது சொத்தில் பாதி தொகையை, விவாகரத்திற்கு பிறகு மனைவிக்கு வழங்கியுள்ளனர். இந்நிலையில், மெராக்கோ கால்பந்து அணியின் பிரபல வீரர் அசரப் ஹக்கிமி, தனது மனைவியை விவாகரத்து செய்ய முற்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதியில், விவாகரத்து கொடுப்பது உறுதி செய்யப்பட்ட பின், அவரது மனைவி, சொத்தில் பாதி தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கூறியிருந்தார். இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு என்ன என்று நீதிமன்றம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், அவர் கூறிய தகவல்களை கேட்டு, நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது. அதாவது, கால்பந்து அணிக்காக விளையாடி, அவர் சேர்த்து வைத்திருந்த 200 கோடி ரூபாய் சொத்துக்களை, தனது தாய் பெயரிலேயே வாங்கியுள்ளார். அவர் பெயரில் எந்த சொத்துக்களும் இல்லாததால், அசரப்பின் முன்னாள் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். விவாகரத்து பெற்றால், சொத்து பறிபோய்விடும் என்று முன்னரே கணித்து தான் அவர் இவ்வாறு செய்திருப்பாரோ என்று பல்வேறு கிண்டலாக கூறி வருகின்றனர்.